மே 1 தொழிலாளர் தினம்


 மே 1 தொழிலாளர் தினம். 


தொழிலாளர்களையும் தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை போற்றும் வகையிலும் மே தினம் (May Day (உழைப்பாளர்கள் தினம்), ஒவ்வொரு ஆண்டு மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 


எட்டு மணி நேர பணிக்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இப்போராட்டம் 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து தொடங்குகிறது. 1886 ஆம் ஆண்டு, எட்டு மணி நேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்ய, நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. மே 1 ஆம் தேதி தொடங்கிய போராட்டம், மே 2 இல் அமெரிக்காவின் சிகாகோவில் ஹேமார்க்கெட்டில் பல்வேறு உயிரிழப்புக்களுடன் உச்சம் அடைந்தது. இதையடுத்து, மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நாள், உழைக்கும் வர்க்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கமே, உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான முயற்சிகளை மதிப்பதும், அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரிவிப்பதும், சுரண்டலுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பதுமே ஆகும்.

எனினும் தற்போது மே தினம் வெறும் அரசியல் கட்சிகளுக்கு அவர்களுடைய அரசியல் அபிலாசைகளை வெளிக்காட்டும் தினமாக கொண்டாடப்படுவது கவலைக்குரிய விடயமாகும். 


நன்றி: abp Live

தொகுப்பு: எம் பீ எம் சமீர்

கருத்துரையிடுக

புதியது பழையவை