ஆய்வுச்சுருக்கம் எழுதுதல்

இலங்கை நூலகச் சங்கம் நடாத்திய “ஆராய்ச்சியில் சிறந்து விளங்குதல்" என்னும் தலைப்பிலான இலவச நிகழ்நிலைப் பயிற்சிப் பட்டறையின் போது முன்வைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.

Santharooban 
B.Sc Hons, (EUSL), M.Sc (UoP), MLIS (UoC), M.Sc (UoP), ALA (Sri Lanka)
Senior Assistant Librarian Gr.
Eastern University, Sri Lanka


தொகுப்பு: 
M.B.M.Shameer, BBA.
Srilanka Teacher Service
Sameer_mbm@Hotmail.com




ஆய்வுச் சுருக்கம்: ஓர் அறிமுகம்.

• ஆய்வுச் சுருக்கம் என்பது “ஆய்வுக் கட்டுரையொன்றின் சுருக்கமான சாரம்சம்’ ஆகும்.

• உங்களது ஆய்வின் உள்ளடக்கம் பற்றிய கண்ணோட்டத்தினை வாசகர்களுக்கு விரைவாக வழங்குகிறது.

• ஆய்வுச் சுருக்கம் உங்களது ஆய்வின் முக்கியமான கூறுகளையும் அல்லது ஆய்வின் மையக் கருத்தினையும் முக்கியமான ஆய்வு முடிவுகளையும் சுருக்கமாகச் சுட்டிக் காட்ட வேண்டும்.

• முக்கியமான பரிந்துரைகளையும் உள்ளடக்கியிருக்கலாம்.


ஆய்வுச் சுருக்க வகைகள்

1. ஆய்வறிக்கைச் சுருக்கம் (Theses/dissertation abstract)

2. ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் (Research paper abstract)

3. முன்மொழிவுகளுக்கான சுருக்கம் (Abstract for call for proposal)

4. ஆய்வு மாநாட்டுக்கான சுருக்கம் (Conference abstract)


ஆய்வறிக்கைச் சுருக்கம்

• சற்று நீண்டதொரு சாரம்சமாக இருக்கும் (1 அல்லது 2 பக்கங்கள்)

• ஆய்வறிக்கையின் பிரதான படிகளையும் அவற்றின் முடிவுகளையும் விளக்குவதாக இருக்கும்.

• பொதுவாக ஆய்வறிக்கையுடன் சேர்த்து வாசிக்கப்படும்


ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம்

• ஆய்வுக் கட்டுரை எழுதிய பின்னர் எழுதப்படும்.

• ஆய்வுக் கட்டுரையுடன் சேர்த்து ஆய்வுச் சஞ்சிகைகளுக்கு அனுப்பப்படும்.

• மிகவும் சுருக்கமாக இருக்கும். பொதுவாக 200 தொடக்கம் 300 சொற்கள்

• பொதுவாக ஆய்வுக் கட்டுரையுடன் சேர்த்து வாசிக்கப்படும். சிலவேளைகளில் ஆய்வுச் சுருக்கம் பொருத்தமாக இல்லாவிடினும். ஆய்வுக் கட்டுரை சஞ்சிகைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் திருத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

• ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடப்பட்டபின் வாசகர்களைக் கவருவதற்காக இவை பயன்படும்.


முன்மொழிவுகளுக்கான சுருக்கம்

• பொதுவாக குறித்த நோக்கமுடைய புத்தகமொன்றின் அத்தியாயங்கள் அல்லது விசேட வெளியீடொன்றில் கட்டுரை எழுதுவதற்காக கோரப்படும்போது இவை எழுதப்படும்.

• நீண்ட சுருக்கமாக இருக்கும்: 1000-2000 சொற்கள்

• அத்தியாயம், அல்லது கட்டுரை எழுதுவதற்கு முன்னர் எழுதப்படும்.

• புத்தகம் வெளியிடுவோர் தமது நோக்கத்திற்குரியதாக உள்ளதா என மதிப்பிடுவதற்கு இதனைப் பயன்படுத்துவர்

ஆய்வு மாநாட்டுக்கான சுருக்கம்

• ஆய்வு மாநாட்டில் நீங்கள் நிகழ்த்தவிருக்கும் ஆய்வுரையின் (Research presentation) ஒரு சாரம்சமாகும்.

• 200-250 சொற்கள் கொண்டதாகவோ அல்லது 1000-1500 சொற்கள் கொண்டு நீண்டதாகவோ (Extended abstract) இது இருக்கலாம்.

• இதன் நோக்கம்: நீங்கள் பேச உத்தேசித்துள்ள விடயத்தை ஆய்வு மாநாட்டுக் குழுவினர் அங்கீகரிக்க வைப்பதாகும்.

• குறித்த ஆய்வு மாநாட்டிற்குரிய கருப்பொருளுக்குட்பட்ட விடயதானத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


ஆய்வுச் சுருக்க உள்ளடக்கம்

1. ஆய்வுப் பின்னணி, ஆய்வுப் பிரச்சினை.

2. ஆய்வின் தேவை அல்லது நோக்கம்.

3. ஆய்வு முறை.

4. ஆய்வில் கண்டறியப்பட்டவை.

5. முடிவுகளின் முக்கியத்துவம் அல்லது பரிந்துரைகள்




விரிந்த ஆய்வுச் சுருக்கம் (Extended Abstract)

• இது ஒரு பூரண ஆராய்சிக் கட்டுரையின் சிறிய மாதிரி போன்று காணப்படும்.

• ஆராய்சிக் கட்டுரை போன்று அனைத்து பகுதிகளும் சிறிய அளவில் இருக்கும்.

• ஆய்வறிமுகம், நோக்கம், ஆய்வுமுறை. ஆய்வில் கண்டடிறியப்பட்டவை. ஆய்வு முடிவுகள், உசாத்துணைகள்.

• பொதுவாக சாதாரண ஆய்வுச் சுருக்கத்தை விட அதிகமான சொற்கள் காணப்படும்: 750-1500 சொற்கள்

• 2-3 பக்க அளவினதாகக் காணப்படலாம்.

• சில ஆய்வு மாநாடுகள் இவ்வாறான விரிந்த ஆய்வுச் சுருக்கத்தை எதிர்பார்க்கும்.


ஆய்வுச் சுருக்கம் எழுதுவதற்கான சில குறிப்புகள்

• ஆய்வுச் சுருக்கம் எழுதுவதற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

• சொற்களின் எண்ணிக்கை, எழுத்துரு, எழுத்தளவு போன்ற இன்னபிற. ஆய்வு மாநாட்டின் கருப்பொருளுக்குட்பட்டதாக விடயதானம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

• வாக்கியங்களை இறந்தகாலத்தில், அல்லது நிகழ்காலத்தில் அமைக்கவேண்டும். எதிர்காலத்தில் எழுதும் வாக்கியத்தைத் தவிர்க்க.

• ஆய்வுக்கட்டுரை இன்றியும் ஆய்வுச் சுருக்கம் எழுதலாம்.(ஆய்வு மாநாட்டிற்கு) ஆனால் ஆய்வு செய்திருக்க வேண்டும்.

• அவசியமற்ற எழுத்துச் சுருக்கங்களை (abbreviation and acronym) தவிர்ப்பது நன்று.

• எளிய வாக்கியங்களைப் பயன்படுத்துவது சிறப்பு.

• துறைசார் கலைச் சொற்களை முடிந்தவரையில் தவிர்ப்பது நன்று. பொதுவாக அனைவருக்கும் விளங்கும் படியாக அமைத்தல் சிறப்பு.

• உங்கள் ஆய்வின் முக்கியத்துவம் விளங்கும் படியாக எழுதுதல் சிறப்பு.

• ஒரு தடவை எழுதியபின்னர் சொற்களின் எண்ணிக்கையைச் சீர் செய்யலாம்.

• சுருக்கத்தின் இறுதியில் ஆய்வினைப் பிரதிபலிக்கும் திறவுச் சொற்களை தேர்ந்து குறிப்பிடுதல் வேண்டும்.



மேலதிக வளங்கள்

1. https://www.grammarly.com/blog/write-an-abstract

கருத்துரையிடுக

புதியது பழையவை